குறிப்பிட்ட நாட்டிற்கு இடையிலான பயணத்திற்கு சிறிய விமானங்கள் பயன்படுத்தப்படும் – SIA..!

SIA plans to use smaller aircraft for Singapore-Hong Kong air travel bubble
SIA plans to use smaller aircraft for Singapore-Hong Kong air travel bubble (Photo: Reuters)

சிங்கப்பூர் – ஹாங்காங்கிற்கு இடையில் வரவிருக்கும் Travel bubble என்னும் கட்டுப்பாடுகளுடன் கூடிய விமான பயணத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தனது சிறிய விமானத்தை பயன்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வர்த்தக துணைத் தலைவர் லீ லிக் ஹ்சின் (Lee Lik Hsin) இன்று (நவ 9) தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி…ஒன்றின் விலை S$25.

இரு வழி விமான பயணக் குமிழிக்கு (Travel bubble) ஏர்பஸ் A380 விமானங்கள் பயன்படுத்த முடியுமா என்பது குறித்த இணையம் வழி சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு திரு லீ பதிலளித்தார்.

மேலும், அரசாங்கத்திற்கு இருக்கும் சில அக்கறைகள் காரணமாக அந்த முடிவை எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பயண குமிழி முறையை வெற்றிபெறச் செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் நிச்சயமாக, அரசாங்கத்தின் பல்வேறு கருத்தாய்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம், அந்த இருநாடுகளும் இடையிலான இந்த குமிழி எனும் கட்டுப்படுத்தப்பட்ட இரு வழி விமான பயண முறை அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் உற்பத்தி, கடல் சார்ந்த துறைகளில் 6,370 வேலை வாய்ப்புகள்.

குறிப்பிட்ட 2 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் தனிமைப்படுத்தும் வசதிகளில் தங்குவது கட்டாயம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…