சிங்கப்பூரில் கிருமித்தொற்று விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு..!

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் அதிரடி நடவடிக்கையின் போது வீடுகளை விட்டு வெளியேறி, அரபு ஸ்ட்ரீட்டில் (Arab Street) உள்ள ஒரு கிளப்புக்குச் சென்றதாக பத்து பேர் மீது இன்று (நவம்பர் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மே மாதம் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில், 4 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“ஆசியாவின் சிறந்த துறைமுகம் சிங்கப்பூர்” – 32வது முறையாக பட்டத்தை வென்று சாதனை.

ஒன்றுகூடல்

அதே போல, அதிகாலை 12.10 மணியளவில் 122 அரபு ஸ்ட்ரீட்டில் உள்ள கிளப் விளையாட்டு மைதானத்தில் அவர்கள் ஒன்று கூடியதாக கூறப்படுகிறது.

அவர்கள் அந்த கிளப் தொடர்பான வர்த்தக விஷயங்களைப் பற்றி விவாதிக்க சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பெண்கள் ஒரு சமூக நோக்கத்திற்காக ஒன்றுகூடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள்

இதில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பெண்களும் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில், பெரும்பாலோருக்கு தலா இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம்

அவர்கள் நியாயமான காரணமின்றி வீடுகளை விட்டு வெளியேறியதற்காகவும், அனுமதிக்கப்படாத காரணங்களுக்காக மற்றவர்களைச் சந்தித்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் பெரும்பாலானோர், அடுத்த மாதம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

சட்டம்

COVID-19 விதிமுறைகளை மீறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி…ஒன்றின் விலை S$25.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…