சிங்கப்பூரில் 8 கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!

(Photo: Jenny Kane/AP)

சிங்கப்பூரில் 8 சில்லறை விற்பனை கடைகளுக்கு புகையிலை விற்பனை செய்ய ஆறு மாதங்களுக்கு உரிமம் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) இன்று (நவம்பர் 11) தெரிவித்துள்ளது.

அந்த கடைகள், குறைந்தபட்ச வயதான 20 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்.

அமலாக்க நடவடிக்கை

ஆணையம் நடத்திய சோதனை கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மூலம் அந்த கடைகள் பிடிப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அந்த எட்டு கடைகளின் விற்பனையாளர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை

அந்த கடைகளுக்கு, ஆறு மாத தடை காலங்களில் புகையிலை பொருட்களை விற்க அனுமதி கிடையாது.

இதுபோன்று தவறிழைக்கும் சில்லறை விற்பனையாளர்களிடம் கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்றும், மேலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

உரிமையாளர்கள் பொறுப்பு

தங்கள் கடைகளில் நடைபெறும் புகையிலை பொருட்களின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், அவர்களின் ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கும் உரிமையாளர்கள் பொறுப்பு என்பதை ஆணையம் நினைவுபடுத்தியுள்ளது.

சட்டம்

இந்த குற்றத்தில் ஈடுபடும் முதன்முறை குற்றாவளிக்கு S$5,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதே போல கடையின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

அதே போல மீண்டும் குற்றத்தில் ஈடுபடும் பட்சத்தில் S$10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் கடையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

சிங்கப்பூரில் அரிவாள் கொண்டு அதிகாரியை தாக்கிய சந்தேக நபர் கைது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…