“அரசாங்கத்தின் மீது சிங்கப்பூரர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் ” – சிங்கப்பூர் பிரதமர் லீ பேச்சு

Photo: Singapore Prime Minister Official Facebook Page

சிங்கப்பூர் பிரதமர் லீ செவ்வாய்க்கிழமை (April 12) நடைபெற்ற நிர்வாக சேவை அதிகாரிகளின் பதவி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கும் விழாவில் சிங்கப்பூர் குறித்தும் சிங்கப்பூர் மக்கள் குறித்தும் உரையாற்றினார். “சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களின் நலன்களை அரசாங்கம் இதயத்தின் கொண்டுள்ளது என்று மக்கள் நம்புகிறார்கள். Covid-19 நெருக்கடியை அரசாங்கம் கையாள்வது இந்த நம்பிக்கையில் மிக முக்கியமானது” என்று கூறினார்.

சிங்கப்பூர் அரசாங்கம் எவ்வளவு திறமையானது மற்றும் எந்த அளவிற்கு சரியான முடிவுகளை எடுக்கும் என்ற அரசாங்கத்தின் மீதான சிங்கப்பூரர்களின் நம்பிக்கை பரந்த அளவிற்கு விரிவடைகிறது என்று கூறினார்.

சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை Covid-19 வைரஸ் தொற்று பரவலின் போது வெளிப்படுத்தியதாக கூறினார். Covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி தடுப்பூசி போட முன்வந்த போது மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

பொதுமக்களின் நம்பிக்கை மதிப்புமிக்கது. நேர்மை மற்றும் பொறுப்புடன் சிங்கப்பூரர்களுக்கு சரியான நெறிமுறை மற்றும் திறமையான அதிகாரிகள் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து கட்டி எழுப்ப வேண்டும் என்று கூறினார்.

அரசியல் தலைமையுடன் பொதுப்பணித் துறையும் ஒருங்கிணைந்து செயல்படுவது வெற்றியின் முக்கிய அம்சமாகும்.அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அவர்களுக்கான நேரம் வரும்போது அதனை ஏற்றுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.