42வது ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

COVID-19: Singapore makes 'decisive move' to close most workplaces, says PM Lee
Photo: PM Office Singapore

 

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மே 10, 11 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோவில் (Labuan Bajo) நடைபெறும், 42வது ஆசியான் உச்சி மாநாட்டில் (42nd ASEAN Summit) கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய வம்சாவளிக்கு சிறைத் தண்டனை!

ஆசியான் கூட்டமைப்பிற்கு தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இந்தோனேசியா, நடப்பாண்டு இரண்டு உச்சி மாநாடுகளை நடத்துகிறது. ஆசியானின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பொருளாதார ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம், புவிசார் அரசியல், மியான்மர் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் உள்ளிட்டவைக் குறித்து தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

சிங்கப்பூர் பிரதமருடன், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதம அலுவலக அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஸ்கூட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… பாங்காக்கிற்கு மீண்டும் திரும்பிய விமானம்!

மே 9, 10 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரின் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் (Deputy Prime Minister and Minister for Finance Lawrence Wong) செயல் பிரதமராகவும், மே 11- ஆம் தேதி அன்று மூத்த அமைச்சரும், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹீயன் (Senior Minister and Coordinating Minister for National Security Teo Chee Hean) செயல் பிரதமராக இருப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.