புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் பிரதமர் லீ – பொதுமக்களும் போட்டுக்கொள்ள ஊக்குவிப்பு

புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் லீ
Photo: Lee Hsien Loong/Facebook

புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் லீ பொதுமக்களும் அதனை போட்டுக்கொள்ள ஊக்குவித்தார்.

இன்று (நவ.2) சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

வெறும் S$1 கொடுத்து S$56 லட்ச வெள்ளியை தட்டிச்சென்ற நபர் – முழுத்தொகையும் அவருக்கே

இந்நிலையில், கோவிட்-19 ஓமிக்ரான் XBB 1.5 திரிபு வகைக்கு எதிராக இலவச தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் லீ ஆர்வமூட்டினார்.

இந்த தடுப்பூசி, தற்போதைய கோவிட்-19 கிருமிக்கும், மாற்றம் அடையும் திரிபு வகைகளுக்கும் எதிராக பொதுமக்களுக்கு சிறந்த பாதுகாப்பையும் வழங்கும் என அவர் கூறினார்.

இந்த புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி சமீபத்தில் சுகாதார அமைச்சகத்தால் (MOH) வெளியிடப்பட்டது.

எங்கே போடுவது?

  • கூட்டுப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி நிலையம் (JTVC)
  • பொது சுகாதாரத் தயார்நிலை மருந்தகம் (PHPC)
  • தடுப்பூசியை வழங்கும் பாலிக்ளினிக்

மேற்கண்ட இடங்களுக்கு சென்று நீங்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் எகிறும் இந்திய பயணிகளின் வருகை – “சிங்கப்பூரை தாய்நாடு போல கருதும் இந்தியர்கள்”