“சிங்கப்பூர் பல பன்னாட்டு நிறுவனங்களின் வட்டாரத் தலைமையகமாக விளங்குகிறது”- பிரதமர் லீ பெருமிதம்!

Photo: PM OFFICE IN SINGAPORE

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று (29/08/2021) நாட்டு மக்களுக்கு தேசிய தின பேரணி (National Day Rally Speech) உரையாற்றினார். 1 ஸ்டார்ஸ் அவென்யூவில் உள்ள மீடியா கார்ப் அலுவலகத்தில் (Mediacorp Campus at 1 Stars Avenue) நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று (30/08/2021) மாலை 06.45 PM முதல் 07.15 PM வரை மலாய் மொழியிலும், இரவு 08.00 PM மணி முதல் 09.15 PM மணி வரை ஆங்கிலம் மொழியிலும் தேசிய தின பேரணி உரையை பிரதமர் ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,000 பேர் காணொளி மூலம் பங்கேற்றனர்.

பிரதமரின் தேசிய தின பேரணி உரையில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

அப்போது பிரதமர் கூறியதாவது; “பொது மருத்துவமனைகள், மருந்தகங்களில் பணிபுரியும் பெண் முஸ்லீம் தாதியர் வரும் நவம்பர் மாதத்திலிருந்து, முக்காடு அணிவதற்கு அனுமதி வழங்கப்படும்.இன, சமய நல்லிணக்கம் சீராகத் தொடர்வதை உறுதிச் செய்யும் நோக்கில் கவனமாக எடுக்கப்பட்ட முடிவு இது. கொரோனா நோய்த்தொற்று கிருமிப்பரவல் உலகத்தை மாற்றிவிட்டது; அது பலரின் வேலைகளையும், வர்த்தகங்களையும் பாதித்துவிட்டது. ஒவ்வொரு முறை நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று நினைக்கும்போதும், அது வேறோரு இடத்தில் இருந்து தொடங்குகிறது.

இருப்பினும், மற்ற நாடுகளைவிட சிங்கப்பூர் அதைச் சிறந்த வகையில் கையாண்டது. மக்கள் வெளிப்படுத்திய கட்டுப்பாடும், மீள்திறனும் அதற்குப் பெரும் பங்காற்றியது. மக்கள் சிங்கப்பூர் மீது வைத்த நம்பிக்கைக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனா தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

சேவை தொழில் துறையின் வருமானம் இரண்டாவது காலாண்டில் இரட்டிப்பு வளர்ச்சி!

சிங்கப்பூர், பல பன்னாட்டு நிறுவனங்களின் வட்டாரத் தலைமையகமாக விளங்குகிறது. கொரோனா நோய்த்தொற்றுச் சூழலிலும், பொருளியல் வளர்ச்சிக் கழகம் சில பெரிய நிறுவனங்களைச் சிங்கப்பூரில் முதலீடு செய்ய ஈர்த்துள்ளது. Pfizer, BioNTech, Zoom போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணம். இந்த முதலீடுகள் மூலம் சிங்கப்பூரர்கள் பலருக்கு நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் அதிகமான தொழில்முனைவோர்கள், வாய்ப்புகளைக் கைப்பற்றி, வர்த்தகத்தைப் பெருக்க, ‘Enterprise Singapore’ அமைப்பு ஆதரவளிக்கும்” என்று கூறினார்.