பழைய நிலைக்கு மீண்டும் திரும்பும் சிங்கப்பூர் – பிரதமர் லீ Covid-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து முகநூலில் பதிவு

Photo: Singapore Prime Minister Official Facebook Page

சிங்கப்பூரில் சர்வதேச பயணிகளுக்கான Covid-19 சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் சிங்கப்பூரர்கள் பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது 2020 ஆம் ஆண்டில் covid-19 தொற்றுநோய் சிங்கப்பூரை தாக்குவதற்கு முன்பு இருந்த இடத்திற்கு கொண்டு வரும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சனிக்கிழமை (April 23) தெரிவித்தார்.

Covid-19 கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே சிங்கப்பூர் பிரதமர் லீ ,முகநூலில் மக்களுக்கு அறிவுரை கூறி பதிவிட்டுள்ளார். சிங்கப்பூரர்கள் தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

” வீட்டிற்குள் முக கவசம் அணிவது, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் தனிமைப் படுத்திக் கொள்வது ,ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன் ” பிரதமர் லீ கூறினார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பணியிட திறன்களுக்கு வரம்புகள் இருக்காது என்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. Trace Together மற்றும் Safe Entry போன்ற பயன்பாடுகள் பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்படும். மேலும் பல்வேறு துறைகளில் தடுப்பூசி வேறுபட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் அகற்றப்படும்.

சிங்கப்பூரில் தற்போது Covid-19 நோய்த்தொற்றின் நிலையை குறிக்கும் Dorscon, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரஞ்சு நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.