பிரதமர் லீக்கு மீண்டும் கோவிட் தொற்று உறுதி

pm-lee-tests-positive-for-covid-19-again
Lee Hsien Loong/Facebook

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு மீண்டும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஜூன் 1 ஆம் தேதி அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக ART கருவியின் புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, நோய் பாதிப்பை உறுதி செய்தார்.

சிங்கப்பூரில் S$18,888 அதிஷ்ட பரிசுத் தொகையை தட்டிச்சென்ற தமிழக ஊழியர்!

திரு லீ கூறியதாவது;

“நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் எனக்கு மீண்டும் கோவிட்-19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.”

இது 5-10% நபர்களுக்கு நடக்கும் கோவிட் மறு பாதிப்பு என்று மருத்துவர்கள் குறிப்பிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னர் ஏற்பட்ட நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது இதற்கு ஆபத்து அதிகம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ART கருவி மூலம் “நெகட்டிவ்” சோதனை வரும் வரை என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என்றார்.

முந்திய தொற்று பாதிப்பு

முன்னதாக, பிரதமர் லீக்கு கடந்த மே 22 ஆம் தேதி கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

திரு. லீக்கு 71 வயதாகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் கோவிட்-19 பூஸ்டர் போட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள் 

“விவாகரத்து வேண்டும்..” – கணவர் மீது கொதிநீரை ஊற்றி தாக்கிய மனைவி.. சிங்கப்பூர் வந்து பதுங்கி இருந்து மனைவி துணிகரம்