கொரோனாவில் இருந்து விடுபட்டு வலுவான நாடாக மேம்படுவதில் நாம் வெற்றி காண்­போம்; பிரதமர் திரு லீ.!

Pmlee congrats govt officers
PHOTO: MCI

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தற்போதைய சூழலை அர­சாங்க அதிகாரிகள் திறம்­பட சமா­ளித்து இருக்கிறார்­கள் என சிங்கப்பூர் பிர­த­மர் லீ சியன் லூங் முகநூலில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள அரசு ஊழி­யர்­கள் மீள்தி­றன், துணிவு, ஆற்­றல் ஆகியவற்றைப் பலப்­ப­டுத்தி இருக்கிறார்கள் என பிரதமர் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவிற்கு மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்த சிங்கப்பூர்.!

கடுமையான உழைப்பு, அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் பாடுபட்டு வரும் அர­சு அதி­கா­ரி­க­ளுக்கு பிர­த­மர் திரு லீ நன்றிகளைத் தெரி­வித்­துக் கொண்­டார்.

ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து பாடுப­டு­வ­தன் காரண­மா­க நமது சூழ்­நிலை உறுதியாக மேம்­பாடு கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய வாழ்க்கை வழ­மை­யில் வாழ கற்றுக்கொள்­வது மிக முக்கி­ய­மா­னது என்றும், COVID-19 கிருமித்தொற்றில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒன்­றா­கச் சேர்ந்து வலு­வான நாடாக மேம்­ப­டு­வ­தில் நாம் வெற்றி காண்­போம் என தான் நம்­பு­வ­தா­க­ பிரதமர் திரு லீ கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்ட பின் இதய கோளாறுகள் ஏற்படுகின்றனவா?