தடுப்பூசி போட்ட பின் இதய கோளாறுகள் ஏற்படுகின்றனவா?

(photo: mothership)

சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபைசர்-பயோண்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கும் இதய பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கக்கூடும் என்றாலும், அவை அரிதாகவே ஏற்படுகின்றன.

அண்மையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பதினாறு வயது இளையர், பளுதூக்கும் பயிற்சி மேற்க்கொண்டு வீடு திரும்பிய பிறகு, இதய துடிப்பு நின்று மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதனால் தடுப்பூசிக்கும் இதய துடிப்பு நின்றதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரித்து வருகின்றனர்.

இது போன்ற 12 விதமான சம்பவங்கள் குறித்த புகார்கள் சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதல் டோஸை விட இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்ட பிறகே இது போன்ற இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது ஆண்களிடம் வெகுவாக காணப்படுவதாக தெரியவருகிறது.

வெளிநாடுகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிகிறது. அமெரிக்காவில் 1200 பேருக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதில் பெரும்பான்மையோர் 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் பாதிப்புகள் பெரும் அளவில் இல்லை எனவும் சிலருக்கு தடுப்பூசியால் தான் ஒவ்வாமை ஏற்படுகின்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில பாதிப்புகள் தென்பட்டாலும் இளைஞர்கள் தயக்கம் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொவிட்-19 கிருமி உலகை விட்டு அகலாத நிலையில் அதற்கு தடுப்பூசி தான் தீர்வு என பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்த்த தொற்றுநோய் மூத்த ஆலோசகரான பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார்.

முதல் மட்டும் இரண்டம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கடுமையான வேலைகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.