சிங்கப்பூரில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதி செய்ய தடையா? – ஐநா சபையின் சட்டங்களை மீறினால் அபராதம்

pokka exports drinks to north korea from singapore UN ban

சிங்கப்பூரில் உள்ள Pokka என்ற பான நிறுவனம் பல்வேறு Pokka பானங்களை வடகொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Pokka நிறுவனம் தயாரித்த பானங்களை Pyongyang பகுதியிலுள்ள உணவகங்கள், பார்கள் மற்றும் சந்தைகளில் விற்பதாக தெரிவித்தது. 2019 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஏற்றுமதி விவகாரம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களில் ஒன்று 123 Duty Free ஆகும்.இது இறக்குமதி ஏற்றுமதி விதிகளின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை முலாம்பழம் பால், ஸ்ட்ராபெரி பால் மற்றும் பால் காபி போன்ற பான வகைகளை வட கொரியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.இதன் மதிப்பு S$3,41,000 ஆகும்.

123 Duty Free மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் குற்றத்திற்காக ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பைவிட மூன்று மடங்கு அதிகமாகவோ அல்லது S$100000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் வரும் குற்றங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாகவோ அல்லது S$200000 வரை அபராதம் விதிக்கப்படும்.அதாவது முதல் குற்றத்திற்கு S$1.02 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும்.

குற்றச்சாட்டுக்களை மறுத்த Pokka,2019 ஆம் ஆண்டில் வடகொரியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதை மறுத்தது. ஐநா சபையின் தடைகள் மற்றும் தேசிய சட்டங்களுக்கு ஏற்ப வடகொரியாவுடன் எந்தவித ஏற்றுமதி தொடர்பும் இல்லை என்று நிறுவனத்தின் தலைவர் இணையதளத்தில் தெரிவித்தார்.