சோவா சூ காங் லூப்பில் கடைசியாக காணப்பட்ட 19 வயது ஆடவர் – கோரிக்கை வைக்கும் காவல்துறை

SPF

சோவா சூ காங் லூப் பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கடைசியாகக் காணப்பட்ட 19 வயது ஆடவர் எங்கே இருக்கிறார் என்று காவல்துறை தேடி வருகிறது.

திரு குவார் ஜுன் ஹாவ் டேரன் (Quar Jun Hao Darren) என்ற அந்த ஆடவர் கடைசியாக இரவு 10 மணியளவில் அங்கு காணப்பட்டார்.

தண்டனை காலம் முடிந்தாலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை சிறை!

அவர் பற்றி தெரிந்தால் தகவல் கொடுக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

சாலையில் சண்டையிட்டு கொண்ட 10 பேர்.. வீடியோ வைரல் – அனைவரையும் தேடி வரும் போலீஸ்