சிங்கப்பூரில் 16 வயது சிறுவனை 10 நாட்களாக காணவில்லை – பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே

Police appealing missing

சிங்கப்பூர்: பிளாக் 418B Fernvale லிங்க் அருகே கடைசியாகக் காணப்பட்ட 16 வயது சிறுவனை 10 நாட்களாக காணவில்லை.

கடைசியாக ஜனவரி 20 மாலை 6 மணியளவில் திரு முகமது டேனியல் அய்சாக் பின் முகமது ஷாருல் என்ற அவர் காணப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஏஜென்சி கூறிய பொய்… முதலாளிக்கும், ஊழியருக்கு மொழியால் ஏற்பட்ட சண்டை – போலீஸ் எடுத்த முடிவு

இந்நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் கேட்டு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் 1800- 255-0000 என்ற ஹாட்லைனை எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதிப்பட கூறியுள்ளனர்.

கட்டிட உயரத்தில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டு நபர் மரணம்