போக்குவரத்துக்கு எதிர்திசையில் லாரியை இயக்கிய ஓட்டுநர் கைது – ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து..!

Police arrest and suspend licence of lorry driver driving against traffic on Tampines Expressway
Police arrest and suspend licence of lorry driver driving against traffic on Tampines Expressway (PHOTO: SCREENGRAB FROM SG ROAD VIGILANTE / YouTube)

தெம்பனிஸ் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, 28 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 9) இரவு 11.40 மணியளவில் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து பல அழைப்புகள் மூலம் புகார் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான காணொளியில், போக்குவரத்துக்கு எதிராக மஞ்சள் லாரி அதிவேகமாக இயக்கப்படுவதை காணலாம்.

வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கியதற்காக ஓட்டுநர் சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டதாகவும், அவரது உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றவாளிகள் 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், $5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மேலும், அவர்களின் ஓட்டுநர் உரிமமும் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக மிதக்கும் தங்குமிட வசதி..!