சிங்கப்பூரில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

Coronavirus: Two more worker dormitories declared as isolation areas
Coronavirus: Two more worker dormitories declared as isolation areas (PHOTO: Screenshot/Google Maps)

சிங்கப்பூரில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

புக்கிட் படோக் ஸ்ட்ரீட் 23-ல் உள்ள Cochrane Lodge I மற்றும் அட்மிரல்ட்டி ரோடு வெஸ்ட்டில் உள்ள Acacia Lodge ஆகிய இரண்டு விடுதிகளை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக சுகாதார அமைச்சர் கன் கிம் யோங் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக மிதக்கும் தங்குமிட வசதி..!

இது நேற்று சனிக்கிழமை இரவு (ஏப்ரல் 11) அரசிதழில் இணைக்கப்பட்டது.

அந்த இரண்டு தளங்களிலும் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 தொற்று சம்பவங்கள் அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனுடன் சேர்த்து மொத்தம் ஏழு தங்கும் விடுதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது இதன் பொருள், தனிமைப்படுத்தப்பட்ட இந்த தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் அறைகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

இந்த நடவடிக்கை நேற்று சனிக்கிழமை இரவு 11.59 மணிக்கு நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!