சிங்கப்பூர் சாலையில் வாளுடன் அலப்பறை செய்த ஆடவர்; உயிரை பணயம் வைத்து மடக்கி பிடித்த 6 பேருக்கு விருது!

Pic: Social Media

சிங்கப்பூரில் கடந்த மார்ச் 14ம் தேதி புவாங்கோக் கிரெசண்ட் (Buangkok Crescent) வட்டாரத்தின் போக்குவரத்து சந்திப்பில் சென்ற கார்கள் மற்றும் அங்கு நின்றுகொண்டிருந்த அமிலா சிந்தானா (Amila Chinthana) என்பவரையும் வாள் வைத்திருந்த ஃபடில் யூசோப் என்ற ஆடவர் தாக்கினார். காணொளி

சிந்தானா மீது ஆடவர் வாளை வீசி தாக்கிய சம்பவத்தில், தோள், கை மற்றும் கழுத்துப்பகுதியில் வெட்டுக்காயமும், உடம்பில் கீறல்களும் ஏற்பட்டது.

சிந்தானாவை நோக்கி தாக்கும்போது அந்த ஆடவர் கால் தவறி கீழே வழுக்கி விழுந்தார். உடனே சிந்தானாவும் மற்றும் சாலையில் சென்றவர்களும் தாக்கியவரை மடக்கி பிடித்தனர். காவல்துறையினர் வரும் வரையிலும் அந்த ஆடவரை தரையில் அழுத்திப் பிடித்து செயல்படாமல் தடுத்தனர்.

இந்தியா உள்ளிட்ட 66 தென்கிழக்கு ஆசிய நகரங்களுக்கு விமான சேவை விரிவு – SIA, Scoot அதிரடி அறிவிப்பு

வாளை வீசி தாக்கிய அந்த ஆடவரை கண்டு அஞ்சாமல் துணிச்சலாக செயல்பட்ட சிந்தானா உட்பட ஆறு நபர்களையும் பாராட்டி சிங்கப்பூர் காவல்துறையினர் நேற்று (மார்ச் 15) பொது உணர்வு விருதை வழங்கி கெளரவித்தனர்.

இசசம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஃபடில் யூசோப் என்ற அந்த ஆடவர் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர், சில மருந்துகளை உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் சாலையில் சென்ற வாகனங்களை வாளால் அடிக்கும் காட்சியை அந்த வழியே வந்த சிந்தானா‌ வீடியோ எடுத்தார். இதை கொண்டு ஆத்திரமடைந்த ஃபடில், சிந்தானா‌வை தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஃபடில் யூசோப் மீது நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 16) குற்றம் சாட்டப்பட உள்ளது. அவரின் இந்த செயல் பயங்கரவாத நடவடிக்கை இல்லை என உள்நாட்டு பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.

2 வருட கட்டுப்பாட்டிற்கு பின் மகிழ்ச்சி..அதிகாரிகளுடன் ஐலேண்டிற்கு ஜாலி ட்ரிப் – வெளிநாட்டு ஊழியர்கள் நெகிழ்ச்சி!