சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் – தமிழகத்தை சேர்ந்தவர் புகார்

Police have registered a case against a Singapore-based firm for duping a PU professor

இந்தியாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த துணைப்பேராசிரியரிடம் மோசடி செய்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் மீது காவல்துறை அதிகாரிகளால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் சண்டிகரில் வசித்து வரும் ஆனந்த் சிங் சிங்கப்பூர் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த GIC கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் லிண்டா ,ஆனந்த் சிங்கின் கனரா மற்றும் ஆக்சிஸ் வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்தியுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனந்த் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

வாட்ஸ்அப் மூலம் ஆனந்தை தொடர்பு கொண்ட ஒரு பெண் ,தான் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், முதலீடு செய்வதற்கு ஆனந்தையும் ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் முதலீடு செய்வதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அந்தப் பெண் தனது இந்திய வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை ஆனந்திற்க்கு பகிர்ந்துள்ளார். 2021 -ம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் ஆனந்தின் அனுமதியின்றி அவரது வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றும்படி வாடிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் நீடித்துக்கொண்டே இருந்த நிலையில், இறுதியாக அந்தப் பெண் தான் ₹53000 மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆனந்தின் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட ஆனந்த் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவர் ,அந்தப்பெண்ணின் முதலீட்டில் தான் தலையிடவில்லை என்றும், மோசடியில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.