கோயில் வாசலில் குழந்தை மீது பலகையை தட்டி விட்டு தாக்கிய ஆடவர் – 4 பேர் மீது போலீஸ் விசாரணை

மஞ்சள் நிற சைன்போர்ட் பலகையை ஒருவர் குழந்தையின் மீது தட்டி விட்டு தாக்கும் காணொளி பரவியதை அடுத்து, நான்கு ஆடவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் நவம்பர் 8 திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலுக்கு வெளியே கியோங் சைக் (Keong Saik) சாலையில் நடந்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

ஒர்க் பெர்மிட் அனுமதி விண்ணப்பத்தில் சதி திட்டம் – சிங்கப்பூர் தம்பதிக்கு சிறை

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், அடுத்தவர் சொத்துகளை அபகரித்ததற்காகவும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணொளியில் ஆடவர் ஒருவர் வைத்திருக்கும் சைன்போர்டை மற்றொரு ஆடவர் தட்டி விடுவதையும், பின்னர் அந்த சைன்போர்ட் குழந்தையை தாக்குவதையும் காணமுடிகிறது.

அதனை அடுத்து, திங்கள்கிழமை இரவு 9.45 மணியளவில் சிராங்கூன் MRT நிலையத்தில் அந்த இளைஞர்கள் பிடிபட்டனர்.

அவர்களில் இருவர் அந்த பலகையை வைத்து கொண்டிருப்பதை போலீஸ் அதிகாரிகள் கண்டனர், அதனை அடுத்து அவர்கள் பிடிபட்டனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் 18 வயதுடைய இருவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய அப்டேட்