சிங்கப்பூரில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்; போலீசார் விசாரணை..!

Police investigating 2 Singaporeans for taking part in public assembly without permit
Police investigating 2 Singaporeans for taking part in public assembly without permit (Photo: Facebook/Kirsten Han)

சிங்கப்பூரில் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக இரண்டு சிங்கப்பூரர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுப்பற்றி ஊடகங்களுக்கு விவரங்களை வழங்கிய (ஏப்ரல் 1) போலீசார், இந்த வழக்கு தொடர்பாக மடிக்கணினிகள், மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்று குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க : COVID-19 பரவல் மோசமடைந்தால் 3வது ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவிக்க சிங்கப்பூர் தயார்..!

கடந்த மார்ச் 13 அன்று நடந்த ஒரு சம்பவம் குறித்த புகைப்படங்கள் அடங்கிய பேஸ்புக் பதிவு பற்றி தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதில் 18 வயது பெண் ஒருவர் “PLANET OVER PROFIT”, “SCHOOL STRIKE 4 CLIMATE” மற்றும் “ExxonMobil KILLS KITTENS&PUPPIES” ஆகிய வாசகங்களைக் கொண்ட பதாகையுடன் இருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. Harbourfront Tower One கட்டடத்தின் அருகே அந்தப் படம் எடுக்கப்பட்டது.

மேலும், ​​மார்ச் 13 அன்று மற்றொரு சம்பவத்தில் 20 வயது இளைஞர் “SG IS BETTER THAN OIL @ fridays4futuresg” என்ற பதாகை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது Toa Payoh சென்ட்ரல் கம்யூனிட்டி கிளப் மற்றும் Toa Payoh அக்கம்பக்கம் காவல் நிலையம் முன்னால் நடந்த சம்பவம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதாகை வைத்திருக்கும் நபரின் புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் இந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன் தேவையான போலீஸ் அனுமதி பெற விண்ணப்பிக்கவில்லை, என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பொது ஒழுக்குச் சட்டத்தின்கீழ் உரிய அனுமதி பெறாமல் கூடுவது சட்டப்படி குற்றம் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இலவசமாக தொலைக்காட்சி சேனல்கள் வழங்கும் சிங்டெல்..!