சிங்கப்பூரில் இலவசமாக தொலைக்காட்சி சேனல்கள் வழங்கும் சிங்டெல்..!

Singtel's care pack: Free TV channels
Singtel's care pack: Free TV channels (Photo: Business Insider SG)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிக நேரத்தை தங்கள் வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு சிங்டெல் அனைத்து சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு சில தொலைக்காட்சி சேனல்களை மூன்று மாதங்கள் இலவசமாக வழங்க உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 வைரஸ் சோதனையை விரைவாக கண்டறிய பரிசோதனை கருவி அறிமுகம்..!

இதில் டிஸ்கவரி, ஏஷியன் ஃபுட் நெட்வொர்க், கார்ட்டூன் நெட்வொர்க், நிக்கலோடியன் போன்ற மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு மற்றும் கல்வி சம்மந்தமான சேனல்களும் அடங்கும்.

மேலும், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், சிங்டெல் இயக்குநர் குழு உறுப்பினர்கள் வரும் நிதியாண்டில் 10% ஊதியத்தைக் குறைத்துக்கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் பங்களாதேஷ் ஊழியர்; ஆண் குழந்தை பெற்றெடுத்த மனைவி..!