“என்னை அடித்து காயப்படுத்தி, S$230,000 பணத்தை திருடிவிட்டனர்” என போலி நாடகம் – CCTV காட்சிகளை வைத்து ஆடவரை தூக்கிய போலீஸ் – விசாரணை

Pexels

தன்னை மூன்று பேர் தாக்கி கொள்ளையடித்துச் சென்றதாக பொய்யான புகாரை அளித்ததற்காக 50 வயது ஆடவர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பொய்யான புகார், கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் தங்களுக்கு கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் நிறுத்தி இருந்த காருக்குச் செல்லும் போது அந்த ஆடவரை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தாக்கியதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் கம்பீரமான ராஜ நாகம், பெரிய உடும்பை அப்படியே விழுங்கும் பிரம்மிப்பு காட்சி – இணையத்தில் வைரல்

அந்த மூவரும் அவரை பேஸ்பால் மட்டையால் தாக்கியதாகவும், தப்பிச் செல்வதற்கு முன் அவரிடம் இருந்து S$230,000 பணத்தைக் கொள்ளையடித்ததாகவும் ஆடவர் குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவர் சொன்னதுக்கும் வீடியோ காட்சிகளுக்கும் இடையில் பல முரண்பாடுகளைக் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த ஆடவர் தவறான தகவல்களை அளித்ததாகவும், அவர் புகாரளிக்கப்பட்ட குற்றத்திற்கு நடக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அந்த ஆடவரிடம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஊழியர்களின் சம்பளம் 15 சதவீதம் வரை அதிகரிப்பு – சம்பள உயர்வை எதிர்பார்த்து அதிகமான ஊழியர்கள்!