புங்க்கோல் பீல்டில் (Punggol Field) காயங்களுடன் கிடந்து உயிரிழந்த ஆடவர்; காவல்துறை விசாரணை தொடர்கிறது..!

Police investigating murder at Punggol Field after man dies of injuries
Police investigating murder at Punggol Field after man dies of injuries (Photo: Daymon Lim)

புங்க்கோல் பீல்டில் (Punggol Field) காயமடைந்த நிலையில் கிடந்த, 38 வயது நபர் உயிரிழந்ததை அடுத்து காவல்துறை கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சி.என்.ஏவின் கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறை, திங்களன்று (மே 11) ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் புங்க்கோல் பீல்டில் உதவி கோரி அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 24,000-ஐ கடந்தது..!

அதனை தொடர்ந்து, அந்த நபர் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்பு அங்கு அவர் காயங்களால் உயிரிழந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி பேஸ்புக் பயனர் ஒருவர், பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உதவிக்காக ஒருவரின் அழுகுரல் கேட்டு சென்றபோது, எங்கும் ரத்தம் காணப்பட்டதாக விவரித்து இருந்தார்.

இந்நிலையில், பாசிர் ரிஸ்-புங்க்கோல் நாடாளுமன்ற உறுப்பினர் சுன் சுவெலிங் (Sun Xueling), உயிரிழந்தவரின் அன்புக்குரியவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தாம் காவல்துறையினருடன் பேசியதாகவும், அவர்கள் அருகிலுள்ள கேமரா காட்சிகளை சோதனையிடுவதாகவும் திருமதி சுன் கூறினார்.

மேலும், பாதுகாப்பு குறித்த குடியிருப்பாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் ஆக அதிகமாக 504 பேர் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!