சிங்கப்பூரில் சுமார் S$17,500 கள்ள நோட்டுகள் பறிமுதல்; 3 பேர் கைது.!

Police seize fake currency
Pic: Singapore Police Force

சிங்கப்பூரில் போலியான 100 வெள்ளி நோட்டுகளை தயாரித்து அவற்றை பயன்படுத்த திட்டமிட்டிருந்த சந்தேகத்தின் பெயரில், கடந்த ஞாயிற்றுகிழமை அன்று 27 மற்றும் 44 வயதுள்ள இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் சுமார் 17,500 வெள்ளி மதிப்புள்ள போலி 100 வெள்ளி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

‘எம்பிளாய்மென்ட் பாஸ்’ வைத்திருப்போரில் இந்தியர்களின் சதவீதம் அதிகரிப்பு- மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தகவல்!

மேலும், போலியான 100 வெள்ளி நோட்டை பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில், 63 வயது ஆடவர் ஒருவரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த நபரிடமிருந்து, மேலும் ஒரு 100 வெள்ளி போலி நோட்டும், போதைப்பொருள் தொடர்பான சாதனங்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், சிங்கப்பூரில் 100 வெள்ளி கள்ள நோட்டைப் பயன்படுத்திய சந்தேகிக்கத்தில், கடந்த ஜூலை 2ம் தேதி ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் போலி நோட்டுகளை தயாரித்து அல்லது பயன்படுத்திய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

தடுப்பூசி போட்டுகொண்ட இளையர்… கடும் உடைபயிற்சி மேற்கொண்ட பின்னர் மயங்கி விழுந்தார்..!