அச்சு அசல் POSB, HSBC, UOB வங்கிகள் போன்று மோசடி – எச்சரிக்கும் போலீஸ்

SPF

வங்கி போன்று பொய்யாக ஏமாற்றும் மோசடிகள் குறித்து சிங்கப்பூர் காவல் படை (SPF) வியாழக்கிழமை (மார்ச் 17) பொதுமக்களை எச்சரித்தது.

அதாவது மோசடி கும்பல் POSB, HSBC மற்றும் UOB போன்ற வங்கிகள் போல ஆள்மாறாட்ட மோசடி செய்வதாக SPF எச்சரிக்கை செய்தது.

பெண்ணை நாசம் செய்த பங்களாதேஷ் நாட்டவர்கள்: இன்று (மார்ச் 17) நீதிமன்றம் அளித்த உத்தரவு…!

மோசடி செய்பவர்கள் மூன்று மோசடி வகைகளைப் பயன்படுத்தி வங்கிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்வதாக போலீசார் கூறினர்.

முதல் வகையில், மோசடி செய்யும் கும்பல் போலியான மின்னஞ்சல்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்துவதாகக் கூறி ஏமாற்றுவார்கள்.

இரண்டாவது வகை, வங்கித் தொடர்பானவற்றை ஊக்குவிக்கும் விதமாக ஏமாற்று SMS செய்திகள் அனுப்பப்படும்.

அதாவது நிலையான வைப்பு அல்லது அதிக வட்டி விகித சேமிப்பு போன்றவற்றை ஊக்குவித்து அனுப்பப்படும்.

மூன்றாவது வகை, வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் செயலிகள் மூலம் பேங்க் லோகோவுடன் கூடிய வீடியோ கால் மூலம் மோசடி செய்வார்கள்.

இதுபோன்ற மோசடி குறித்து ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால், 1800-255-0000 என்ற போலீஸ் ஹாட்லைன் எண்னை அழைக்கலாம் அல்லது ஆன்லைனில் புகார் செய்யலாம்.

துணி காயவைக்கும் ரேக் பின்னால் நின்று தவறான செயல் செய்த ஆடவர்… நெட்டில் பரவிய வீடியோ – தூக்கிய போலீஸ்!