சிங்கப்பூரில் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு அதிகரிக்கும் வேலை..!

சிங்கப்பூர் பட்ஜெட்
Singapore Jobs

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு வேலை தேடிய 10 பாலிடெக்னிக் பட்டதாரிகளில் ஒன்பதுக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது.

பாலிடெக்னிக் பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் அல்லது தேசிய சேவையை (NS) முடித்த உடனே அவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

Circle Line 6 சுரங்கப்பாதை பணிகள் நிறைவு – 3 புதிய MRT நிலையங்கள்…!

கடந்த ஆண்டு, பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 92.2 சதவீதமாக இருந்தது. இது அதற்கு முந்தைய 2020ல் 87.4 சதவீதமாகவும், 2019ல் 90.7 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 பாலிடெக்னிக் பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வின் (GES) கண்டுபிடிப்புகளில் இருந்து இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

அதே போல, சராசரி மொத்த மாதச் சம்பளம் 2020ஆம் ஆண்டில் S$2,400 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டில் S$2,500ஆக உயர்ந்துள்ளது என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

பாலத்தின்கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் எலும்புக்கூடு: இறந்து 6-12 மாதம் இருக்கலாம் – யார் என்றே தெரியாத மர்மம்!