பொங்கலோ பொங்கல்! – சிங்கப்பூரில் களைகட்டும் லிட்டில் இந்தியா! இவர்தான் சிறப்பு விருந்தினர்!

தமிழர் திருநாளாம் தைத்திருநாள்! என்று கூறுவார்கள்.உண்ணும் உணவை உருவாக்க அயராது உழைக்கும் உழவர்களையும்,கலாச்சாரத்தையும் போற்ற தமிழர்களால் கொண்டாடப்படும் பெருவிழா தைத்திருநாள் ஆகும்.சிங்கப்பூரில் பெரும்பாலான தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கமான நிகழ்வு ஆகும்.இந்தாண்டு பொங்கல் கொண்டாட்டம் சிங்கப்பூரில் பெரிய அளவில் நடக்கவிருக்கிறது. லிட்டில் இந்தியா கடைக்காரர்களின் லிஷா அமைப்பு கொண்டாட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்தது.

எதிர்வரும் ஜனவரி 7ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் பொங்கல் ஒளியேற்றும் விழா இடம்பெறுகிறது.இந்த விழா பிப்ரவரி 5ஆம் தேதி வரை லிட்டில் இந்தியாவில் நடைபெறும்.கோவில்களில் சிறப்பு அர்ச்சனை நடைபெறும்.

சிராங்கூன் ரோடு, புக்கிட் தீமா முனையில் இருந்து ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் வரை பொங்கலை முன்னிட்டு ஒளிஎற்றப்படும்.விழாவிற்கு பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜாவும் சிறப்பு வருகை தருவார். தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்.