சிங்கப்பூரில் மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

Photo: Minister S.Iswaran Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொங்கல் பண்டிகைக்கான ஒளியூட்டு தொடங்கியுள்ளது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ள லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கம், பொங்கல் பண்டிகை குறித்த சிறப்புகள் மற்றும் தமிழரின் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

செந்தோசா வானில் திடீரென தோன்றிய மர்மமான கருப்பு வளையம்: “என்னவா இருக்கும்” – குழப்பத்தில் பொதுமக்கள்

அதேபோல், சிங்கப்பூரில் உள்ள இந்திய மரபுடைமை நிலையத்தின் அலுவலகத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டுவண்டிகள், பொங்கல் பானைகள், ஓவியங்கள் உள்ளிட்டவை அடங்கிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், மக்களுடன் இணைந்து பானையில் பொங்கலிட்டு, பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில், சுமார் 100- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்ற அமைச்சர், மாடுகளுக்கு உணவளித்தார்.

Photo: Minister S.Iswaran Official Facebook Page

இது குறித்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஜனவரி 8- ஆம் தேதி அன்று மதியம் எங்கள் குடியிருப்பாளர்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடினோம். களிமண் பானையைப் பயன்படுத்தி பொங்கல் வைத்து கொண்டாடினோம்.

சாக்லேட் பவுடருடன் தங்கத்தைக் கலந்து கடத்திய நபர் கைது!

2023 அனைவருக்கும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். வரவிருக்கும் சமூக நிகழ்வுகளின் போது உங்களில் பலரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.