சிங்கப்பூரில் கரகம், பறை இசைக் கருவி உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து வியந்த பள்ளி மாணவ, மாணவிகள்!

சிங்கப்பூரில் கரகங்கள், பறை இசைக் கருவி உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து வியந்த பள்ளி மாணவ, மாணவிகள்!
Photo: LISHA

 

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா, செராங்கூன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன,

சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!

லிஷா அமைப்பினர், தமிழர்களின் பாரம்பரியத்தை சிங்கப்பூரில் உள்ள அனைவரும் தெரிந்துக் கொள்ளும் வகையில், Poli@Clive Street- ல் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கரகங்கள், கெட்டி மேளம், நாதஸ்வரம், பறை இசைக் கருவில் காட்சி வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் கரகங்கள், பறை இசைக் கருவி உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து வியந்த பள்ளி மாணவ, மாணவிகள்!
Photo: LISHA

இதனை சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அவற்றைப் பார்வையிட்டு வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரகத்தை எவ்வாறு தலையில் வைப்பது? கரகத்தை தலையில் வைத்த பிறகு எப்படி கீழே விழாமல் ஆடுவது? பறை இசை கருவியை எவ்வாறு இசைப்பது? கெட்டி மேளம் மற்றும் நாதஸ்வரம் எவ்வாறு இசைப்பது? போன்றவை குறித்து அந்தந்த கருவிகளுக்கு என்று நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் விளக்கம் அளித்ததுடன், செய்முறை விளக்கத்தையும் செய்துக் காண்பித்தனர்.

சிங்கப்பூரில் கரகங்கள், பறை இசைக் கருவி உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து வியந்த பள்ளி மாணவ, மாணவிகள்!
Photo: LISHA

வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கும் திட்டம்.. மலேசியாவில் வேலை அனுமதியுடன் நிர்கதியாய் நிற்கும் ஊழியர்கள்

இதனைக் கண்ட பள்ளி மாணவ, மாணவிகள் வியந்தனர். அத்துடன், பறை இசை கருவியை இசைத்தும், கெட்டி மேளத்தை இசைத்தும், கரகத்தை தலையில் வைத்தும் மகிழ்ந்தனர்.