ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷப் பூஜை!

Photo: Sri Sivan Temple

 

சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி அச்சம் வேண்டாம் – “தைரியமாக செய்யுங்கள்.. உயிரை காப்பற்றுங்கள்” – ரகசியம் காக்கப்படும் என உறுதி

இந்த கோயிலில், மாதந்தோறும் பிரதோஷப் பூஜை (Prathosham Prayers) நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜூலை 1- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 04.00 மணிக்கு பிரதோஷப் பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் கோயிலின் https://sst.org.sg/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பதிவுச் செய்யலாம்.

பான் தீவு அதிவிரைவுச்சாலையில் கடும் விபத்து: ஓட்டுநர் மரணம்

உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்திவிடுவார்கள்.பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷப் பூஜையைக் காணலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை அணுகலாம் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.