குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சீனா செல்கிறார் சிங்கப்பூர் அதிபர்!

Photo: Singapore President Halimah Yacob Official Facebook Page

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் சீனா செல்கிறார்.

சிங்கப்பூரில் 5,000ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு!

சிங்கப்பூர் அதிபரின் சீன பயணம் குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) இன்று (28/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சீன அதிபர் ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 24- வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் (Olympic Winter Games) தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், சீனாவின் தலைநகர் பெய்ஜிங் (Beijing) நகருக்கு வரும் பிப்ரவரி மாதம் 3- ஆம் தேதி அன்று செல்கிறார்.

பிப்ரவரி 6- ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், சீன அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கும் வரவேற்பு விருந்திலும் சிங்கப்பூர் அதிபர் கலந்துக் கொள்கிறார்.

போக்குவரத்து காவல்துறை அதிகாரியை சாலையில் இழுத்து சென்ற கார் ஓட்டுநர் – சிறை, தடை, அபராதம் விதிப்பு

சிங்கப்பூர் அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (Minister Of Foreign Affairs), கலாசாரம், சமூகம், இளைஞர் மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் லோ யென் லிங் (Minister of State Culture, Community and Youth, Trade and Industry Low Yen Ling), அதிபரின் அலுவலகத்தின் உயரதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆகியோரும் சீனா செல்கின்றனர்.

அதிபர் ஹலிமா யாக்கோப் இல்லாத நேரத்தில், அதிபரின் ஆலோசகர்கள் குழுவின் தலைவரான எடி தியோ (Eddie Teo, Chairman of the Council of Presidential Advisers) அதிபரின் அலுவலகத்தில் செயல்பாடுகளை மேற்கொள்வார்”. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.