“வேட்பாளர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, மதிப்பிட்டு வாக்களியுங்கள்”- சிங்கப்பூரர்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் அட்வைஸ்!

Pmlee congrats govt officers
PHOTO: MCI

 

 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “நான் அதிபர் தேர்தலுக்கான ஆணையை வெளியிட்டுள்ளேன். ஆகஸ்ட் 22- ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும்.

மார்பகத்தை மேலும் மெருகேற்ற வேண்டி ஊசி போட்டுக்கொண்ட பெண் மரணம்

ஒரு சிலர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊடகங்களும் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதிபர் அனைத்து சிங்கப்பூரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், அதிபர் என்பவர் நாட்டின் ஒற்றுமையையும், லட்சியங்களையும் பிரதிபலிப்பவர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வோர் வேட்பாளரும் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அவர்களையும், அவர்களின் கருத்துகளையும் மதிப்பிடுங்கள். அதன் பிறகு சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடாங்கில் கோலாகலமாக நடந்த தேசிய தின அணி வகுப்பு!

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 01- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.