செப்.1- ல் அதிபர் தேர்தல்- சிங்கப்பூர் தேர்தல் துறை அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?- சிங்கப்பூர் தேர்தல் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Photo: Google Street View

 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூரில் அதிபர் தேர்தலை நடத்த சிங்கப்பூர் தேர்தல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, சிங்கப்பூர் அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சிங்கப்பூர் தேர்தல் துறை (Singapore Elections Department) வெளியிட்டுள்ளது.

பாடாங்கில் கோலாகலமாக நடந்த தேசிய தின அணி வகுப்பு!

அதன்படி, ஆகஸ்ட் 17- ஆம் தேதி தகுதிச் சான்றிதழ், சமூக சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய இறுதி நாளாகும். ஆகஸ்ட் 18- ஆம் தேதி அரசியல் நன்கொடைச் சான்றிதழ்ப் பெறுவதற்கு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும்.

ஆகஸ்ட் 21- ஆம் தேதி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்; ஆகஸ்ட் 22- ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும். ஆகஸ்ட் 22- ஆம் தேதி தொடங்கும் தேர்தல் பிரச்சாரம், வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதி நிறைவு பெறும்.

செப்டம்பர் 1- ஆம் தேதி அதிபரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு நாளன்று சிங்கப்பூர் முழுவதும் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்பகத்தை மேலும் மெருகேற்ற வேண்டி ஊசி போட்டுக்கொண்ட பெண் மரணம்

அதேபோல், ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தால், போட்டியின்றி அன்றைய தினமே அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் துறையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.