அதிபர் தேர்தலுக்கான சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!

File Photo

வரும் பிப்ரவரி 6- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று கூட உள்ள சிங்கப்பூர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட இரண்டு மசோதாக்களை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் செய்யவிருக்கிறார்.

வானத்தில் பறந்த சில நொடிகளில் தீ விபத்து… அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!

தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் ஆறு ஆண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 13- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 13- ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தினர் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017- ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட அதிபர் தேர்தல் திருத்த மசோதாவில் பிரச்சாரம் மேற்கொள்வது, பொதுக்கூட்டங்களை நடத்துவது, பேரணி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!! தைப்பூசத்தை முன்னிட்டு இந்து அறக்கட்டளையின் முக்கிய அறிவிப்பு..

அதேபோல், வரும் பிப்ரவரி 6- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் வீட்டு விலை, Keppel ஊழல் விவகாரம், SPH மீடியா நிறுவனத்தின் விநியோக எண்ணிக்கை அதிகமாகக் காட்டப்பட்டது உள்ளிட்டவைக் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.