அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கும், கென்யாவுக்கும் செல்கிறார் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வரும் மே 14- ஆம் தேதி முதல் மே 16- ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கும் (Cape Town), மே 17- ஆம் தேதி முதல் மே 19- ஆம் தேதி வரை கென்யாவின் நைரோபி (Nairobi) நகருக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்த இரு நாடுகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் குத்துச்சண்டை.. இருவரை கைது செய்தது போலீஸ் – வீடியோ வைரல்

கேப் டவுனில் தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசாவை (South African President Cyril Ramaphosa) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்கள் தலைமையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பிறகு சிங்கப்பூர் பிரதமருக்கு தென்னாப்பிரிக்கா அதிபர் மதிய விருந்தளிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா துணை அதிபர் பால் மஷாடைலையும் (Deputy President Paul Mashatile) சிங்கப்பூர் பிரதமர் சந்திக்கவிருக்கிறார். அவருக்கு துணை அதிபர் இரவு விருந்தை வழங்கவிருக்கிறார். தென்னாப்பிரிக்கா வாழ் சிங்கப்பூரர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்கவிருக்கிறார்.

பின்னர் கென்யா தலைநகர் நைரோபிக்கு செல்லும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோவை சந்தித்துப் பேசுகிறார்.

பிரதமருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தொடர்பு, தகவல், சுகாதாரத்துறையின் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி (Senior Minister of State, Ministry of Communications and Information and Ministry of Health, Dr Janil Puthucheary), வர்த்தகம், தொழில் மற்றும் கலாச்சாரம், இளைஞர் அமைச்சர் ஆல்வின் டான் (Minister of State, Ministry of Trade and Industry and Ministry of Culture, Community, and Youth, Alvin Tan) மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

பென்ஜூரு சாலையில் லாரி மோதி விபத்து: ஒருவர் மரணம்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இல்லாத போது மூத்த அமைச்சர் தியோ சீ ஹியனும் (Senior Minister and Coordinating Minister for National Security Teo Chee Hean), துணை பிரதமர் லாரன்ஸ் வோங் (Deputy Prime Minister and Minister for Finance Lawrence Wong) ஆகியோர் தற்காலிக பிரதமராக இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.