West Coast Highwayயில் விபத்தில் சிக்கி பயங்கரமாக தீப்பற்றி எரிந்த லாரி – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி (Video)

Abdul Farhan

West Coast Highwayயில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப். 1) Prime mover லாரி விபத்தில் சிக்கியது, இதனை அடுத்து ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைத்தளங்களில் பரவியது, அதில் வாகனம் தீப்பிடித்து எரிவதைக் காணமுடிந்தது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, CPM துறைகள், Work permit, S Pass ஊழியர்களுக்கு ஏப். 1 முதல் இது கட்டாயம்!

மேலும் அந்த லாரி சாலை தடுப்பைத் தாண்டி சாலையின் ஓரத்தில் கிடப்பதையும் காண முடிகிறது.

இந்த விபத்து குறித்து காலை 11.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

68 வயதான Prime mover லாரி ஓட்டுநர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார் என்று சிங்கப்பூர்க் காவல் படை (SPF) கூறியுள்ளது.

மேலும் காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன என்றும் SPF கூறியது.

விபத்தைத் தொடர்ந்து West Coast Highway மேம்பாலம் மூடப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இன்று மதியம் 12.10 மணிக்கு ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இன்று ஏப். 1 முதல் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதி தேவை இல்லை – Travel update