சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வெளியானது ‘பிரின்ஸ்’ திரைப்படம்!

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. இந்த படத்தின் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ்.

வெளிநாட்டு ஊழியர்களை தங்கும் விடுதிக்கு நேரடியாக சென்று சந்தித்த MWC – 200 ஊழியர்களுக்கு தற்காலிக உணவு ஏற்பாடு

இந்த நிலையில், திட்டமிட்டப்படி இன்று (21/10/2022) காலை உலகம் முழுவதும் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் 600- க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஷார்ஜா, துபாய் ஆகிய நாடுகளிலும் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் 8 கார்களை அடித்து உடைத்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர் – ஏன் அவ்வாறு செய்தார்?

குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள Cathay Cineplex, Golden Village, Shaw Theaters, Carnival Cinemas ஆகிய திரையரங்க நிறுவனங்களின்  பெரும்பாலான திரைகளில் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தைக் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

சிங்கப்பூரில் பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை xgen நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.