தனியார் மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் ‘Sinopharm’ தடுப்பு மருந்து!

File Photo

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. அதேசமயம், பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிதல்; சமூக இடைவெளியைக் கடைபிடித்தல்; கைகளை அடிக்கடி கழுவுவதல் உள்ளிட்ட அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 11 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு

மேலும், அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசிப் போடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கொரோனா தடுப்பூசியைப் போட்டு கொள்வதில் உலக நாடுகளுக்கு சிங்கப்பூர் முன்னுதாரணமாக விளங்குகிறது. சிங்கப்பூர் மொத்த மக்கள் தொகையில் 80%- க்கும் அதிகமானோர் முழுமையான கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100% இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள அனைத்து தனியார் மருந்தகங்களும், தனியார் மருத்துவமனைகளும் நேற்று (30/08/2021) பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ‘Gleneagles’ மருத்துவமனையில் மட்டும் நேற்று (30/08/2021) சுமார் 50 பேர், முதல் ‘Sinopharm’ தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். இந்த மருத்துவமனையில் இன்று (31/08/2021) அதிகாரப்பூர்வமாக தடுப்பூசிப் போடும் பணி தொடங்குகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு தடுப்பூசிப் போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 120 பேருந்து ஓட்டுநர்களுக்கு கொரோனா பாதிப்பு.!

‘Gleneagles’ மருத்துவமனை உட்பட ‘IHH Healthcare’ குழுமத்தின்கீழ் செயல்படும் 4 இடங்களில் ‘Sinopharm’ தடுப்பூசிப் போடப்படுகிறது. ‘Raffles Medical’ குழுமமும் நாளை (01/09/2021) முதல், இரண்டு இடங்களில் ‘Sinopharm’ தடுப்பூசியைப் போடத் தொடங்கும். இங்கு மட்டும் சுமார் 10,000- க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

பக்கவிளைவு காரணமாக ‘mRNA’ தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்துகளைப் போட்டுக்கொள்ள இயலாத பலர், இதற்கு முன்பதிவு செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.