முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 11 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு

Google Street View

ஹோம்ஸ்டே லாட்ஜ் (Homestay Lodge) வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் 11 பேரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (ஆக. 31) தெரிவித்துள்ளது.

அறிகுறிகள் இல்லாமலும் அல்லது லேசான சுவாச நோய் (ARI) அறிகுறிகள் மட்டுமே அவர்களிடம் காணப்பட்டதாக MOM கூறியுள்ளது.

அதன்பிறகு, மேலதிக கவனிப்பு மற்றும் சிகிச்சைக்காக அவர்கள் சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

“சமூகத்துடன் ஒன்றிணைய வெளிநாட்டினர்கள் சிங்கப்பூரினைப் புரிந்து நடந்துக்காெள்ள வேண்டும்”

அவர்கள் வழக்கமான சோதனை மூலம் கண்டறியப்பட்டனர் என்றும் அமைச்சகம் கூறியது, அவர்களின் நெருங்கிய தொடர்புகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்த பணியிடங்களில் தற்காலிகமாக வேலையை நிறுத்தும்படி கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) அறிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில், விடுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் அடிக்கடி சோதிக்கப்படுவார்கள் என்றும் MOM கூறியுள்ளது.

கடுமையாகும் எம்பிளாய்மண்ட் பாஸ், S-பாஸ் அடிப்படைத் தகுதி