“79 ஊழியர்களுக்கு வேலை இல்லை” – பணிநீக்கம் செய்த சிங்கப்பூர் நிறுவனம்

PropertyGuru lays off 79 employees
(PHOTO: Today)

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru குழுமம் நிறுவனத்தில் மாற்றங்களை செய்து வருவதால் 79 வேலைகளை குறைக்கவுள்ளதாக கூறியுள்ளது.

ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்த தகவல்களை, PropertyGuru குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஹரி வி கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (பிப் 27) அன்று கடிதம் மூலம் அறிவித்தார்.

துறவி கொடுத்த லாட்டரிக்கான அதிஷ்ட எண்.. நம்பி வாங்கி கடனாளி ஆனதால் துறவியை தாக்கிய ஆடவர்

நிறுவனத்தை கட்டமைக்க விரிவான மதிப்பாய்வை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இதனால், வியட்நாமில் உள்ள அவர்களின் ஒன்பது கிளைகளில் இரண்டு கிளைகள் மூடப்படும் என அவர் தெரிவித்தார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட 79 ஊழியர்கள் PropertyGuruவின் மொத்த பணியாளர்களில் 5 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

சிங்கப்பூர், வியட்நாம் மட்டுமல்லாமல், மலேசியா மற்றும் தாய்லாந்திலும் PropertyGuru செயல்படுகிறது. இது முன்பு இந்தோனேசியாவிலும் இயங்கியது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலைசெய்த 12 மாதங்கள் வரை மேம்படுத்தப்பட்ட இழப்பீடு தொகுப்புகள் வழங்கப்படும்.

அந்த தொகுப்புகளில் ஒரு மாத அடிப்படை சம்பளமும் போனஸாக கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையும் அளிக்கப்படும்.

கூடுதலாக, அவர்கள் வேலை செய்த நிறுவனத்தின் மடிக்கணினிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள், அதை கொண்டு மூன்று மாதங்களுக்கு தனிப்பட்ட ஆலோசகர் மூலம் வேறு வேலை குறித்த சேவைகளைப் பெறலாம் என்று திரு கிருஷ்ணன் கூறினார்.

அழுகிய மற்றும் தொங்கி நிலையில் கண்டெடுக்கப்பட்ட 36 வயதுமிக்க ஆடவர்