சிங்கப்பூர் சரக்கு பெட்டக முனையத்தைப் பார்வையிட்ட தமிழக அமைச்சர் எ.வ.வேலு!

சிங்கப்பூர் சரக்கு பெட்டக முனையத்தைப் பார்வையிட்ட தமிழக அமைச்சர் எ.வ.வேலு!
Photo: TN DIPR

 

தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பிற்கிணங்க, நேற்று (செப்.27) வந்திருந்தார்.

சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு ரொக்கம் பறிமுதல்!

சென்னையில் இருந்து சிங்கப்பூர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரக ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் டி.பிரபாகர் மற்றும் பிற அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் “சிங்கப்பூர் துறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை” நேற்று (செப்.27) அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.

அப்போது, அமைச்சரிடம் சிங்கப்பூர் துறைமுகத்தின் சிறப்புகளைப் பற்றி, சிங்கப்பூர் துறைமுகத்தின் பிரதிநிதி எடுத்து கூறினார். பன்னாட்டு துறைமுக சரக்குப் பெட்டக முனையங்களில், சிங்கப்பூர் சரக்குப் பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்குப் பெட்டகப் பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சாக்குப் பெட்டக முனையம், துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது.

சிங்கப்பூரில் கட்டுமானத்துறை ஊழியர்களின் உயிரிழப்பு அதிகம் – விழுந்து மரணித்தவர்களும் அதிகம்

2023- ஆம் ஆண்டில், சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும், இந்த துறைமுகம் மட்டும், 37 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை (37million TEU) வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System-BESS), கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இயங்குதல் வசதி (Computer Integrated Terminal Operations Systems-CITOS) மற்றும் துறைமுக வலைதளம்(Portnet) போன்ற நவீன தொழிற்நுட்பங்கள், இந்த சாதனைக்கு காரணமாகும். சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் (50million TEU) சரக்குப் பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது என்று அமைச்சர் எ.வ.வேலுவிடம் விளக்கிக் கூறினார்.

சாங்கி ஏர்போர்ட் முனையம் 2 வடக்குப் பகுதி திறப்பு – தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு விமானங்கள் இங்கு தான்

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம், அமைச்சர் தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது என்பதை தெரிவித்து, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையோ அல்லது இதர சிறுதுறைமுகங்களில், ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதித்தார்.