‘சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது ‘PSLV-C56′ ராக்கெட்’- இஸ்ரோ அறிவிப்பு!

'சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது 'PSLV-C56' ராக்கெட்'- இஸ்ரோ அறிவிப்பு!
Photo: ISRO

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜூலை 30- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் ‘PSLV-C56’ விண்ணில் பாய்கிறது.

ஊழியர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கும் முதலாளிகள்… ஊழியர்களுக்கு பக்கபலமாக நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு

‘PSLV-C56’ ராக்கெட் மூலம் விண்ணில் பாய உள்ள செயற்கைக்கோள்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, சிங்கப்பூரைச் சேர்ந்த DSTA & ST இன்ஜினியரிங் நிறுவனம், ‘DS-SAR’ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் முதன்மை செயற்கைக்கோளாக விண்ணில் பாய்கிறது ‘PSLV-C56’.

அதேபோல், சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Nanyang Technological University- ‘NTU’) மாணவர்களால் உருவாக்கப்பட்ட Velox-AM, Arcade, SCOOB-II ஆகிய மூன்று சிறிய வகை செயற்கைக்கோள், சிங்கப்பூரின் நியூஸ்பேஸ் நிறுவனம் ( NuSpace Pte Ltd) தயாரித்துள்ள ‘NuLIoN’ செயற்கைக்கோள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (National University Of Singapore- ‘NUS’) ‘Galassia-2’ செயற்கைக்கோள், சிங்கப்பூரின் அலையென நிறுவனத்தின் (Aliena Pte Ltd) ‘ORB-12 Strider’ செயற்கைக்கோள் என 6 சிறிய செயற்கைக்கோள்களுடன் ‘PSLV-C56’ ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

அழிந்து வரும் அரியவகை “மலாயன் தபீர்” – சிங்கப்பூர் வரலாற்றில் 2வது முறையாக காட்சி

நடப்பு ஜூலை மாதம் 14- ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்த நிலையில், இரண்டாவது ராக்கெட்டாக ‘PSLV-C56’ விண்ணில் பாயவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.