வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C58 ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C58 ராக்கெட்!
Photo: ISRO

 

 

இன்று (ஜன.01) காலை 09.10 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இருந்து விண்ணில் ஏவப்பட்டது PSLV-C58 ராக்கெட். எக்ஸ்போசாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு PSLV-C58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

‘ஆங்கிலப் புத்தாண்டு’- ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள்!

போலரிமீட்டர் செயற்கைக்கோளானது கருந்துளை, விண்மீன் மண்டலம், நெபுலா குறித்து ஆராயவுள்ளது. எக்ஸ்ரே கதிர் மூலம் வானியல் இயக்கங்களை ஆய்வுச் செய்ய எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் (XPoSat Satellite) அனுப்பப்பட்டது. திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைக்கோளும் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே திட்டமிட்டபடி, விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. போலரி மீட்டர் செயற்கைக்கோள் கிழக்கு சுற்றுவட்டப் பாதையில் 650 கிலோ மீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல், பிஎஸ்4 என்ற ராக்கெட் பாகம் Poem3 செயற்கைக்கோள்களை 350 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

“லீ குவான் யூ அவர்களின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த ஆண்டில்…..”- பிரதமர் லீ சியன் லூங் புத்தாண்டு வாழ்த்து!

பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத், எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.