பொதுமக்கள் உதவியுடன் ஒருவரை மடக்கி பிடித்த போலீஸ்… வீடியோ வைரல்

public help police arrest man

ஆடவர் ஒருவரை போலீசார் வலுக்கட்டாயமாக மடக்கி பிடிக்கும் வீடியோ சிங்கப்பூர் இணையத்தில் தீ போல பரவி வருகிறது.

ஆடவரை பிடிக்க போலீசாருடன் சேர்ந்து மூன்று பொதுமக்கள் உதவியதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

ஓட்டுநர் உரிமம் இல்லை.. முதலாளிக்கு தெரியாமல் காரை ஓட்டி வந்து விளக்கு கம்பத்தில் மோதியவர் கைது

தொடர்ந்து முரண்டு பிடித்த அந்த ஆடவரை போலீசார் வலுக்கட்டாயமாக வளைத்து பிடிப்பதையும் அதில் காண முடிகிறது.

நேற்று முன்தினம் ஜூன் 5 ஆம் தேதி மதியம் 2:30 மணியளவில் யுஷுன் அவென்யூ 9 மற்றும் யுஷுன் ரிங் ரோடு சந்திப்பில் இந்த சம்பவம் நடந்தது.

அங்கு சொந்த வீட்டில் உறங்குவது போல கீழே படுத்திருந்த 40 வயது ஆடவரை கண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவருக்கு உதவ முயன்ற அதிகாரிகளிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கும் அவர் செவிசாய்க்கவில்லை என்றும் போலீசார் கூறினர்.

அரசு ஊழியரின் கடமையை செய்ய தடையாக இருந்ததற்காக அவர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

மேலும், அவரை பிடிக்க உதவிய மூன்று பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக போலீசார் கூறினர்.

Video: https://www.facebook.com/100083056163713/videos/823455282630338

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் பாதிக்கப்படும் 32 பேருந்து சேவைகள்; ஏன்..?