சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்துகளில் அதிகரிக்கும் மானபங்கப் புகார்கள்.!

Pic: File/TODAY

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில், பேருந்துகள், ரயில்கள் உட்பட அதிகப்படியான மானபங்கப் புகார்கள் போலீசாரிடம் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுப் போக்குவரத்துகளில், மானபங்கம் செய்ததாக சுமார் 148 புகார்களும், பிறரின் உடல் அங்கத்தை பாலியல் வேட்கையுடன் பார்ப்பது தொடர்பாக 79 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 145 மற்றும் 68 என இருந்தது. இந்த இருவகையான குற்றங்கள் தொடர்புடைய 65 பேரை Transcom எனப்படும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு அதிரடிப்படை கைது செய்தது.

சிங்கப்பூரில் நீண்ட நேரம் காத்திருக்கும் சுமார் 90 பேருந்து சேவைகள் – காரணம் என்ன?

சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி 48 வயது பெண் ஒருவர், ரயில் பயணத்தின்போது, தமது பாவாடைக்ககுள் ஆடவர் ஒருவர் படமெடுத்தாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு, கண்காணிப்பு கேமராக்கல் உதவியுடன் சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் ஆடவரை கைது செய்தனர்.

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு வரும் ஆண்டுகளில், படிப்படியாக விரிவடைய இருப்பதால், குற்றம் நிகழாத பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உறுதிசெய்ய பங்காளிகளுடனும், சமூகத்துடனும் இணைந்து பணியாற்றி வருவதாக காவல்துறை கண்காணிப்பாளரும், அதிரடிபபடையின் பயாலேபார் பிரிவு அதிகாரியுமான லிம் சின் சியாங் தெரிவித்துள்ளார்.

மேலும், அவசர நேரத்தில் போலீசாரின் உதவி கிடைப்பதை உறுதி செய்யும் பணிகளும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தமிழர்களுக்கும், மலேசிய தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்..? அப்பாவித்தனமா ஏமாந்து போகதீங்க! – Singapore and Malaysia Tamil