புதுச்சேரியில் இருந்து தமிழக நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்கவுள்ள சிங்கப்பூரின் ஏர் சஃபா நிறுவனம்!

Photo: Wikipedia

சிங்கப்பூரைச் சேர்ந்த விமான குத்தகை நிறுவனமான ஏர் சஃபா (Air Safa), புதுச்சேரியில் இருந்து சென்னை, வேலூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் முக்கிய நகரங்களையும், திருப்பதியையும் இணைக்கும் வகையில் உள்நாட்டு விமான சேவையை நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்குள் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல், மேலே குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில் இருந்து தினசரி விமான சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்!

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று புதுச்சேரி மற்றும் கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் குறைவான இருக்கைகளைக் கொண்ட சிறிய ரக விமானம் சோதனை முறையில் இயக்கப்பட்டது. அத்துடன், புதுச்சேரி விமான நிலைய ஓடுபாதையில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசிய ‘லிஷா’ அமைப்பினர்!

ஏர் சஃபா நிறுவனத்தின் இந்திய பிரிவு அதிகாரி முருகப்பெருமாள் கூறுகையில், “புதுச்சேரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து 19 இருக்கைகள் கொண்ட எல்-410 என்ஜி விமானங்களில் (L-410NG aircrafts) குறுகிய தூர விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.