சிங்கப்பூரில் நீர்நிலைகளில் இறந்து கிடந்த 8 இளம் சுறா மீன்கள்!

shan Lamba via Marine Stewards

புலாவ் ஹந்துவுக்கு (Pulau Hantu) அருகில் உள்ள நீரில் ஆகஸ்ட் 28 அன்று, குறைந்தது எட்டு சிறிய “Blacktip reef வகை சுறாக்கள்” இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலாவ் ஹந்து என்பது சிங்கப்பூரில் முக்கிய பகுதியில் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.

சாலையில் பெண்னை மானபங்கம் செய்த ஆடவர்… போட்டோ எடுத்துக்கொடுத்த பெண் – தட்டி தூக்கிய போலீஸ்

இந்த இளம் சுறாக்கள் நீரில் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் காணப்பட்டதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான மரைன் ஸ்டீவர்ட்ஸின் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

அதில் ஏற்பட்டுள்ள சிதைவுகள் அடிப்படையில், இந்த சுறாக்கள் சமீபத்தில் இறந்ததாகத் தெரிகிறது. இதற்கு முதல் நாள் கூட இறந்து இருக்கலாம் என்று குழு கூறியது.

மேலும், இந்த சுறா மீன்கள் வலையில் சிக்கியிருக்கலாம் என அந்த குழு தெரிவித்துள்ளது.

இறந்த இவ்வகையான சுறாக்கள் சுமார் 1.6 மீ நீளம் வரை வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tampines மாலில் லிப்ட்காக ஏற்பட்ட சண்டை… ஒருவர் மீது தாக்குதல் – போலீசாருக்கு சென்ற புகார்