‘இந்தியாவின் மேலும் ஒரு நகரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை’- விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

இந்தியாவின் மும்பை, டெல்லி, திருவனந்தபுரம், புனே, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம்.

இந்திய கைத்தறி குறித்த சிறப்பு பேஷன் ஷோ, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள இந்திய தூதரகம்!

இந்த நிலையில், விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் (Vistara Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் டிசம்பர் 2- ஆம் தேதி முதல் புனே மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும். வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் விமான சேவை வழங்கப்படும். மேலும், இந்த வழித்தடத்தில் A321neo என்ற விமானத்தை இயக்க உள்ளது. தொடக்க சலுகையாக, புனேவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கு விமான பயண கட்டணமாக ரூபாய் 7,684 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, புனேவில் இருந்து சிங்கப்பூருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. எனினும், அவை நேரடி விமான சேவை கிடையாது.

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.airvistara.com/in/en என்ற விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.