புனே, சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம்!

Photo: Vistara airlines Official Twitter Page

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் (Vistara Airlines), புனே மற்றும் சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவையை டிசம்பர் 2- ஆம் தேதி அன்று தொடங்கியது. இந்த விமான சேவையை இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணை தூதர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வின் போது, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பலத்த காற்று… கடலில் விழுந்த கொள்கலன்கள் – தற்போதைய நிலை என்ன?

விமான சேவையின் தொடக்க சலுகையாக, புனேவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 9,954 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் A321neo என்ற விமானத்தை இயக்கி வருகிறது.

ஜூரோங் ஈஸ்ட் MRT ரயில் நிலையத்தில் ஆடவர் செய்த செயல்: கடுப்பான நெட்டிசன்கள்… போலீசில் புகார்

விமான பயண அட்டவணை, விமான சேவை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airvistara.com/in/en என்ற விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.