ஜூரோங் ஈஸ்ட் MRT ரயில் நிலையத்தில் ஆடவர் செய்த செயல்: கடுப்பான நெட்டிசன்கள்… போலீசில் புகார்

stop-mrt-train-police-report
Instagram/Sgfollowsall

ஜூரோங் ஈஸ்ட் MRT ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் ஸ்க்ரீன் கதவுக்கு இடையில் வேண்டுமென்றே தனது கைகளை விட்டு தடுத்து நிறுத்திய ஆடவர் குறித்து புகார் எழுந்துள்ளது.

இதை “லைஃப் ஹேக்” என்று கூறிய அவர், கடந்த நவ.27 அன்று Sgfollowsall இல் பதிவேற்றியதை அடுத்து, வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 24 பேர் கைது

இது குறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், அவரை சமூக பொறுப்பு இல்லாதவர் என்றும், சுயநலவாதி என்றும் வறுத்தெடுத்தனர்.

“நீங்கள் அவசரமாக வேலைக்குச் செல்லும்போது அல்லது ஒருவரைச் சந்திக்க செல்லும்போது ரயிலைப் பிடிப்பது எப்படி” என்று அவர் அந்த வீடியோவின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த ஆடவர் மீது போலீசிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உறவினரை பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம் – சாலையை கடக்கும்போது டாக்ஸி மோதி ஆடவர் மரணம்